Sunday 16 August 2015
Neela Vaana Odaiyil...Guitar Cover
நட்போடு ஞாயிறு இசை விருந்து.... என்னோட ஸ்டைலில் நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா....." வாழ்வே மாயம் " என்ற தெலுங்கில் இருந்து ரீ மேக் செய்யப்பட்ட படத்தில் வரும் பாடல். ஒரிஜினல் தெலுங்கில் இந்தப் பாடலை தெலுங்கு மொழி இசைஅமைப்பாளர் சக்கரவர்த்தியும் அவரோட இசை அமைப்பில் கிட்டார் வாசித்த ஜோர்ச் என்பவரும் சேர்ந்து இசை அமைத்து இருந்தார்கள். அதை டாக்டர் கே ஜே ஜேசுதாஸ் பாடி இருந்தார். .தமிழில் அந்தப் படத்தை கொப்பி உரிமை வேண்டி " வாழ்வே மாயம் " என்று எடுத்த போது அதை எஸ் பி பாலசுப்பிரமணியம் மிக அழகாகப் பாடினார் . படத்துக்கு கங்கை அமரன் இசை அமைத்தது என்று போட்டார்கள். எப்படியோ அருமையான வரிகளை வாலி இந்தப் பாடலுக்கு எழுதியுள்ளார்.இந்தப் பாடல் ரொமாண்டிக் உணவுகளைக் உருவாக்கும் ஆபேரி இராகத்தின் சாயலில் அதிகம் இருக்கு ...
Subscribe to:
Posts
(
Atom
)